ஜப்பானின் 111 வயது மூத்த குடிமகன் மரணம்

Read Time:1 Minute, 27 Second

Japan.jpgஜப்பானிய ஆண்களில் அதிக வயதுடையவராகத் திகழ்ந்த 111 வயது முதியவர் நிகிரோ டோகுடா திங்கள்கிழமை காலமானார். 1895-ல் ககோஷிமா என்ற இடத்தில் இவர் பிறந்தார். இவர் கடந்த சனிக்கிழமை தமது 111-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடி இரண்டு நாள்கள் கழித்து அவர் மரணமடைந்தார். அவர் ஏப்ரல் மாதம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். அப்பொழுது புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்.

டோமோஜி தநாபே என்ற 110 வயதுக்காரர் மியாசாகியில் வாழ்ந்து வருகிறார். இவரே தற்போது ஜப்பானில் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜப்பானின் அதிக வயதானப் பெண்மணிக்கு தற்போது 113 வயதாகிறது.

உலக அளவில் நீண்ட நாள் வாழ்பவர்கள் என்ற வரிசையில் ஜப்பானியர்கள் இடம்பிடித்துள்ளனர். இதற்கு அவர்களுடைய பாரம்பரியம் மிக்க உணவுப் பழக்கம், நவீன மருத்துவ வசதி ஆகியவையே காரணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் தள்ளுபடி
Next post ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு