பள்ளி பாடப் புத்தகத்தில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்யும் ‘ஹெல்ப்லைன்’ தகவல்!!
பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு ஹெல்ப்லைன் பற்றிய தகவல் பள்ளி மாணவ–மாணவிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் முதல்முறையாக அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக இந்த ஆண்டு பிளஸ்–1 பாடப்புத்தகங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக 1098 என்ற விசேஷ ஹெல்ப்லைன் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒரு கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் ஆகும். பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் மாணவ–மாணவிகள் இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில்கூட இந்த ஹெல்ப்லைன் வசதி குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசினார்.பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய உதவும் ஹெல்ப்லைன் வசதி குறித்து மாணவ–மாணவிகள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சிட அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக 11–ம் ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஹெல்ப்லைன் வசதி குறித்த தகவல் இடம்பெறுகிறது.
தற்போது பிளஸ்–1–ல் அனைத்து பாடப்புத்தகங்களின் அட்டையில் இந்த விவரம் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது 11–ம் வகுப்பு புத்தகங்களில் இடம்பெறும் ஹெல்ப்லைன் தகவல் பற்றிய விவரங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து வகுப்பு புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் இ.சரவண வேல்ராஜ் தெரிவித்தார்.
பள்ளி பாடப்புத்தகங்களின் வினியோகம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:–இந்த ஆண்டு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு 10 கோடியே 34 பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணி கிட்டதட்ட 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. எஞ்சிய 25 சதவீத பணியான 6, 7, 8–ம் வகுப்பு புத்தகங்களை அனுப்பும் பணியும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3–ந் தேதி அன்று பாடப்புத்தகங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு சரவண வேல்ராஜ் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating