இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ”உன் வருகைக்காக லாலி”!!
கொலிவுட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் பேக்டரி மற்றும் ரங்கீலா எண்டர்பிரைசஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘உன் வருகைக்காக லாலி’.
புதுமுகம் மெளரியா, சோனியா சூரி, ஜெய்லானி, லக்ஷா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ரெங்கராஜன் இயக்குகிறார்.
கதை, திரைக்கதை, வசனத்தை பி.சித்திரைச்செல்வன் எழுதி உள்ளார். கவியரசு வைரமுத்து, தாமரை இருவரும் பாடல்கள் எழுத பி.சி.சிவன் – ஸ்ரீராகவ் இருவரும் இசையமைத்துள்ளனர்.
கே.சி.ரவிதேவன், ஜி.மதன், ஐ.பிரசாத் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மலேசியாவில் இருபது நாட்களும், தென் கொரியாவில் பத்து நாட்களும் நடைபெற்றது.
இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் ரெங்கராஜன் கூறுகையில், போலி விசா மூலம் வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தும் கும்பலை தேடி பிடித்து பழிவாங்கும் ஒரு இளைஞனை சுற்றியுள்ள கதை.
இளைஞர்களை கவரும் வகையில் சுவராஸ்யமாக திரைக்கதை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கிற போது விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating