இரு மடங்கு பெரிதான தலையுடன் பிறந்த சிசுவின் ஆபரேஷன் வெற்றி!!(PHOTOS)

Read Time:2 Minute, 15 Second

Roona-Begum1_1728611a
திரிபுரா மாநிலம், அகர்தலா அருகே உள்ள ஜிராணியா கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான். கூலி வேலை செய்யும் இவரது மனைவிக்கு 18 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.

ரூனா பேகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பிறக்கும் போதே மண்டை ஓட்டின் உள்புறம் மூளை அமைந்துள்ள பகுதியில் திரவம் கோர்த்துக் கொண்டதால் தலையின் அளவு சராசரி அளவை விட இருமடங்கு பெரிதாக இருந்தது.

ரூனா பேகத்திற்கு 1 1/2 வயதான போது தலையின் விட்டம் 94 சென்டி மீட்டராக ஆகிவிட்டது. நாளடைவில் இந்த அளவு இன்னும் அதிகரித்துவிடும். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இதனையடுத்து, குர்கானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட ரூனா பேகத்தின் தலையில் இருந்து ஊசி மூலம் திரவத்தை டாக்டர்கள் தற்காலிகமாக வெளியேற்றினர்.

குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நார்வே நாட்டு மாணவர்கள் சிலர், அவளது ஆபரேஷன் செலவுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக திரட்டினர்.

இந் நிலையில், இன்று அவளுக்கு முதல்கட்ட ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷனின் விளைவாக தலையின் விட்டம் சுமார் 30 செ.மீட்டர் குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு கட்ட ஆபரேஷன்களும், தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளித்தால், சராசரி குழந்தையை போல் ரூனா பேகமும் ஆகி விடுவாள் என டாக்டர்கள் கூறினர்.
Roona-Begum4_1728616aRoona-Begum5_1728617aRoona-Begum3_1728618aRoona-Begum2_1728619a

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைக்கு அரச வேலைவாய்ப்பு!!
Next post விலை மாதுவாக மாறிய ஸ்ருதிஹாசன்!!