ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்!!

Read Time:1 Minute, 42 Second

timthumb1முன் விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பி.எம் சக்தி காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் மதன்(வயது 23), ராஜா ஸ்ரீதர்(வயது 19), போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மதன் புதிய டூவீலர் வாங்கினார்.

அதை அதே பகுதியில் வசிக்கும் ஹாஜி முகமது என்பவரின் உறவினர் மன்சூர் அலிகான் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, விபத்து ஏற்பட்டு டூவீலர் சேதமடைந்தது. இதில் ராஜேந்திரன் குடும்பத்துக்கும், ஹாஜிமுகமது குடும்பத்துக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தகராறு முற்றி ஹாஜி முகமது மற்றும் சிலர், ராஜேந்திரன் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர், இருந்தாலும் கும்பல் விடவில்லை.

சாலையில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில், மதன், ராஜா ஸ்ரீதர் ஆகியோர் பலியாயினர். இதனையடுத்து வழக்குபதிவு செய்துள்ள கொரடாச்சேரி பொலிசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவ்வளவோ டூ பீஸ் பார்த்தாலும் இந்த மாதிரி வருமா ?? (அடிச்சு தூக்கும்)(PHOTOS)
Next post சிறு குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை: பிரிட்டன் அரசு முடிவு!!