86 வயது உதைபந்தாட்ட வீரருக்கு 36 வயது பெண்ணுடன் காதல் திருமணம்!!
ரியல் மெட்ரிட் அணியின் 86 வயதான முன்னாள் சிறந்த உதைபந்தாட்ட வீரரான அல்பிரடோ டி ஸ்டிபனோ கொஸ்டாரிக்காவைச் சேர்ந்த 36 வயதுடைய தனது காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1956 – 1960ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ரியல் மெட்ரிட் அணி ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் அல்பிரடொவும் ஒருவர். இக்காலப்பகுதியில் 1957 மற்றும் 1959ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் ஆண்டின் சிறந்த வீரராக தெரிவானார்.
அத்துடன் ஆர்ஜென்டினாவில் பிறந்த இவர் அவ்வணியின் வீரராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது 86 வயதாகும் அல்பிரடொவின் மனைவி கடந்த 2005ஆம் ஆண்டில் மரணமானார். இவர்களுக்கு 7 குழந்தைகள் உண்டு. அல்பிரடொ 2007ஆம் ஆண்டு தனது சுயசரிதை எழுதுவற்கு தயாரானார். இதற்கு உதவியாக வந்தவரே இப்போது காதலியாக மாறியுள்ள சொன்சலிஸ். தற்போது அல்பிரடொவின் செயலாளராகவும் முகாமையாளராவும் பிரதிநிதியாகவும் உதவிசெய்து வருகிறார். 36 வயதாகும் அல்பிரடொவின் காதலியான கொன்சலிஸ் கொஸ்டாரிக்காவைச் சேர்ந்தவர்.
இக்காதல் ஜோடி இம்மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அல்பிரடொ கூறுகையில், நான் வயதானவன் ஆனால் இளமையான இதயத்தைக் கொண்வன் எனத் தெரிவித்துள்ளார். காதலுக்கு கண்தான் இல்லையென்றால் வயதும் இல்லையா?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating