மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகளுக்கு அவர் தந்தையல்ல-ஊடகம்!!
மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், அவரது குழந்தைகளுக்கு தந்தை அல்ல என, லண்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது குறித்து லண்டனிலிருந்து வெளிவரும், ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு, தன் குடும்பம் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும் என்பதில், ஆழ்ந்த விருப்பம் இருந்தது. தன் குழந்தைகள் மிகவும் அறிவாளிகளாக, புத்திக்கூர்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதும் ஜாக்சனின் தீராத ஆசை. இதனால், தன் மனைவியின் விருப்பத்துடன், அவரது கர்ப்பப் பையில், செயற்கை கருவூட்டல் மூலம், அறிவில் சிறந்த அறிஞர்களின் உயிரணுக்களை செலுத்தி, தன் குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். அவர்கள் தான், பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்.
இதில், பிரின்ஸ், பாரிஸ் ஆகியோரை, ஜாக்சனின் மனைவி டெபி ரோவே பெற்றெடுத்தார். ஆனால், பிளாங்கெட், மற்றொரு வாடகைத் தாய் மூலம் பிறந்தார். அந்த வாடகைத் தாய்க்கு, ஜாக்சன் தான், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தையாக இருக்கப்போகிறார் என்பதும் தெரியாது. இது குறித்து, பிரிட்டீஷ் நடிகர் மார்க் லெசர், 54, கூறுகையில், ”ஜாக்சனின் மூன்று குழந்தைகளுக்கும் நான் தான் தந்தை,” என்கிறார். மூன்று குழந்தைகளுக்கும், மைக்கேல் ஜாக்சன் தந்தையைப் போல் தோன்றினாலும், மருத்துவ ரீதியாக, அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை அல்ல.
தன் குழந்தைகள், அறிவாளிகளின் உயிரணுவிலிருந்து தான் வர வேண்டும் என்ற தீராத விருப்பமே, ஜாக்சனின் இந்த முடிவுக்கு காரணம். அது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால், அவரது உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது, ஜாக்சனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஒருமுறை அவர் முடிவு எடுத்துவிட்டால், அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற பிடிவாத குணம் அவரிடம் இருந்தது. ஆனால், இந்த உண்மைகளை, ஜாக்சன் மறையும் வரை, யாரிடமும் சொல்லாமல் சமாளித்த பெருமை, அவரது மனைவி டெபி ரோவே சாரும். இவ்வாறு, ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating