12 வயதில் சினிமாவுக்கு வந்தேன்! சொல்கிறார் சார்மி!!

Read Time:2 Minute, 4 Second

Charmi-Latest-Stills-15தமிழில், “காதல் அழிவதில்லை” படத்தில் சிம்புடன் நடித்தவர் சார்மி. தெலுங்கு நடிகையான இவர் தனது 12 வயதிலேயே நடிகையாகி விட்டார். தற்போது 24 வயதாகும் அவர் நான் சினிமாவுக்கு வந்தும் 12 வருடங்கள் ஆகி விட்டது என்கிறார்.

இந்த 12 வருடத்தில் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவை ரவுண்டு கட்டி விட்டேன். இந்த மாதிரி மட்டும்தான் நடிப்பேன் என்று வட்டத்திற்குள் நிற்காமல், எல்லாவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போதும் நடித்து வருகிறேன் என்று தில்லாக சொல்கிறார் சார்மி.

மேலும், இப்போதும் நான் சின்னப்பெண்ணாட்டமே இருக்கிறேன். இதற்கு காரணம், எனது உணவுப்பழக்கவழக்கங்களும், யோகா பயிற்சியும்தான் என்று சொல்லும் சார்மி, அரிசி உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழ வகைகளைத்தான் அதிகமாக சாப்பிட்டு வருகிறாராம், அந்த வகையில் பால், நான்வெஜ் உணவுகளை அவர் சாப்பிட்டே15 வருடங்கள் ஆகிறதாம்.

இப்படி நான் உடம்பை கச்சிதமாக இளமையாக பராமரித்து வருவதால், சினிமாவுக்கு எனக்காக இடம் இன்னும் அப்படியே உள்ளது. அதிலும், நான் எந்த மொழியில் நடிக்க சென்றாலும், அங்குள்ள நடிகர்களோ, இயக்குனர்களோ எனக்கு காதல் சொல்வது தொடர்ந்து வருகிறது. ஆனால், காதலில் எனக்கு ஈடுபாடு இல்லாததால், இன்னும் அந்த வலையில் விழாமல் தப்பித்துக்கொண்டு வருகிறேன் என்கிறார் சார்மி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லெபனான் நாட்டு முன்னணி அழகிகள்!!(PHOTOS)
Next post காதலர்களை காப்பாற்றிய பொலிஸார்!!