உத்தர பிரதேசத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 42 Second

images123உத்த பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சுரங்கத் துறை நிபுணர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். இறுதியில் சௌபான் பிளாக்கில் உள்ள ஹார்தி பகுதியில் ஒரு டன் மண்ணில் 33 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கச் சுரங்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வின்போது நிபுணர்கள் தங்கம் தவிர பிற முக்கிய மினரல்களையும் இப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

நிபுணர்கள் குழு லலித்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றது. தங்கம் இருக்கிறதா என்று 2 இடங்களிலும், வைரம் மற்றும் பிளாட்டினம் இருக்கிறதா என்று தலா ஒரு இடத்திலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரியாணியை செம கட்டு கட்டும் த்ரிஷா!
Next post கரு.பழனியப்பனின் ’ஜன்னல் ஓரம்’ திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்!(PHOTOS)