சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ : 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

Read Time:4 Minute, 48 Second

Evening-Tamil-News-Paper_79781305790சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விதிகளை மீறி மரத்தடியில் ரசாயன மருந்து கலவையை தயாரித்ததால் விபரீதம் நடந்தது தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில், Ôரத்னா பயர் ஹவுஸ்Õ என்ற பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. சிவகாசியை சேர்ந்த 9 பேர் இணைந்து, இந்த ஆலையை நடத்தி வருகின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில், 200க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில், வழக்கம் போல இன்றும் பணிகள் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஐம்பதுக்கும் குறைவான தொழிலாளர்களே பணிக்கு வந்திருந்தனர்.

பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப்பொருள் கலவையை, பாதுகாப்பான அறையில் வைத்து மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், விதிகளை மீறி ரசாயன மூலப்பொருள் கலவையை இன்று காலை மரத்தடியில் வைத்து தொழிலாளர்கள் தயாரித்து கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராமல் உராய்வு காரணமாக ரசாயன மூலப்பொருள் கலவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்ததும், பட்டாசு ஆலை நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்த சிவகாசி (கிழக்கு) இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

டிஎஸ்பி ராதாகிருஷ்ணனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகிறார். சிவகாசியில் இருந்து நிலைய இயக்குனர் சண்முகராஜ் தலைமையில் இரு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆலை வளாகத்தின் திறந்தவெளி பகுதிகள் முழுவதும் விதிகளை மீறி, ஆபத்தான முறையில் ரசாயன மருந்து கலவை காய வைக்கப்பட்டிருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பட்டாசு ஆலைகள் தொடர்ந்து விதிமீறி நடப்பதும், தொழிலாளர்கள் அவ்வப்போது பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடரும் உயிரிழப்புகள்:

சிவகாசி அருகே கோணம்பட்டி அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரசாயன மருந்து கலவையை தயாரித்த போதுதான், அந்த விபத்தும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அந்த சோகம் மறையும் முன்பு, அடுத்த விபத்து நடந்து 4 பேர் இறந்தது சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டினி கிடக்கும் த்ரிஷா!(PHOTOS)
Next post ப்ரியா மணியுடன் சண்டையா?