எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை

Read Time:2 Minute, 39 Second

587suaபோட்டியொன்றின் போது எதி­ரணி வீரரின் கையைக் கடித்த கால்பந்­தாட்ட உருகுவே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு 10 போட்டிகளில் விளை­யாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்­காக விளையாடிவந்த லூயிஸ் சுவாரெஸ் எனும் வீரருக்கே இத்­தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இங்கி­லாந்து பிரிமீயர் லீக் தொடரில் செல்சீ கழக வீரர் பிரானிஸ்லவ் இவானோ­விக்கின் கையை சுவாரெஸ் கடித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய இங்கிலாந்து கால்பந்தாட்டச் சம்மேள­னத்தின் ஒழுக்காற்றுக் குழு சுவாரெஸுக்கு 10 போட்டிகளில் விளையாட தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனால் இவ்வருட பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் கழகத்தின் இறுதி நான்கு போட்டிகளில் லூயிஸ் சுவாரெஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் லிவர் பூல் கழகத்தின் சார்பில் அதிக கோல்­களை அடித்த வீரராக சுவாரெஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் லிவர்பூல் கழகத்தில் இணைவதற்கு முன்னர் நெதர்லாந்தின் அஜக்ஸ் கழகத்தில் விளையாடிய வேளையிலும் 2011 ஆம் ஆண்டு எதிரணி வீரரொருவரை கடித்தார். அப்போது அவர் மன்னிப்பு கோரிய பின் 2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து லிவர்பூல் கழகம் அதிர்ச்சி தெரிவித்­துள்ளது.

‘லிவர்பூல் கழகமும் அதன் வீரர்களும் இத்தீர்ப்பை அறிந்து அதிர்ச்சிடைந்துள்ளனர்’ என அக்கழகத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான இயன் அய்ரே தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு இன்று வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை -ஷர்மா
Next post கதிர்காமம் பகுதியிலிருந்து சடலமொன்று மீட்பு