பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்

Read Time:2 Minute, 41 Second

ltte.daya-master_&_georgeஅரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்காது, அரசாங்கம் அவர்களை பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலிகளின் தலைவர்களான பிள்ளையான், கருணா ஆகியோருக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், தற்போது தயா மாஸ்டருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்னும் சில காலங்களில் குமரன் பத்மநாதனுக்கும் அரசியலில் களமிறங்க அரசாங்கம் வழியமைக்கும் அல்லது தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தங்களக்கு எதிராக கருத்து வெளியிடுவோரின் பட்டியலை திரட்டி வரும் அரசாங்கம், ஆதரவாக செயற்படுவோரை போஷித்து பாதுகாத்து வருகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் தயா மாஸ்டர் ஆளும் கட்சியில் போட்டி
Next post புத்தளம் விபத்தில் பிரதேசசபைத் தலைவர் பலி