ஆஸியிலிருந்து வந்த மற்றொரு இளைஞர்மீது சித்திரவதை
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இலங்கை பிரஜையான குமார் என்பவர் தனக்கு நடந்த துன்பத்தை கூறியுள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது, 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தேன். இலங்கையிலுள்ள எனது உறவினருக்கு சுகவீனம் ஏற்பட்டபோது அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். அப்போது நானும் என்னுடைய சகோதரரும் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டோம்.
கடத்திச் சென்றவர்கள் என்னை ஒரு இருட்டறைக்குள் பூட்டி வைத்தனர். உறங்க இடமின்றி நாய் போல நான் தரையில் விழுந்தேன். அப்போது நான் இறப்பதுபோல நினைத்ததோடு தனது பிள்ளைகள் குடும்பத்தாரையும் ஒருநிமிடம் நினைத்துக் கொண்டேன். புலிகள் இயக்கத்திற்கும் உனக்கும் தொடர்புள்ளதா என கேட்டு என்னை சித்திரவதை செய்தனர்.
இதற்கு 2007ம் ஆண்டு நான் பஸ் சாரதியாக கடமை புரிந்தபோது புலிகள் அமைப்பு வழங்கிய பொதி ஒன்றை எடுத்துச் சென்றமையே எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என கூறினேன். இலங்கை சென்றிருந்தபோது எனக்கு நடந்ததை மறக்க முடியாது. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு எவருக்கும் நேரக்கூடாது. வேறு எவரும் இவ்வாறான சித்திரவதைகளை அனுபவிக்க கூடாது எனவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.
தனி அறையில் வைத்து என்னை சிலர் தாக்கியதால் எனக்கு இப்போது முதுகெழும்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருட்டறைக்குள் குடிபோதையில் புகுந்த இருவர் என்மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர். நான் கடத்தப்பட்டு நான்காவது நாள் எனது உடலின் பின்பகுதியில் சூடான இரும்பினால் சூடு வைத்தனர். அப்போதே எனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணி அச்சப்பட்டேன்.
என்னுடைய உடலின் பின்புறத்தைப் பார்த்தால் சித்திரவதை சம்பவம் மிக அண்மையில் இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வர். 20,000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுத்து எனது உறவினர் (மாமா) கடத்தியவர்களிடமிருந்து என்னை மீட்டார். இவ்வாறு குமார் அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க இக்குற்றச்சாட்டு பொய்யானது என குறிப்பிட்டுள்ளார். குமாருக்கு அவ்வாறு துன்புறுத்தல் நடந்திருந்தால் அவர் அது குறித்து தன்னிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating