இரண்டு நிமிடக் காதல், இரண்டு மாதங்களாக பஸ்நிலையத்தில் காத்திருப்பு

Read Time:2 Minute, 7 Second

562bus-standரஷ்யாவில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய இரண்டு நிமிட காதலுக்கு காரணமான காதலியின் வருகைக்காக இரண்டு மாதங்களாக ஒரே பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்.

ரஷ்யாவின் சேர்ந்த விட்டலி என்ற 33 வயது நபர் பஸ் நிலையத்தில் பேருந்துக்கா காத்திருந்த போது ஒரு பெண்ணை பார்த்துள்ளார். இரண்டு நிமிடங்களே பார்த்த விட்டலி அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்துள்ளார்.

அந்த நேரம் பார்த்து பேருந்து வந்து விடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்து விடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அடுத்த நாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த விட்டலி தன்னுடைய திடீர்க் காதலியை காணாமல் கவலையடைந்துள்ளார்.

அன்றுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

தன்னுடைய திடீர்க் காதலியின் பெயர் மரியானா என்று ஆரம்பிக்கும் என்றும் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் அந்த பெண்ணின் கண்ணில் தெரிந்த உண்மையான காதலுக்காக நான் இரண்டு மாதங்களாக இதே பேருந்து நிலையத்தில் நிற்கிறேன் என்றும் நிச்சயமாக தன்னுடைய காதலி வருவார் என்ற நம்பிக்கையுடன் கையில் பூங்கொத்துடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் தூசி புயலினால்.. (VIDEO)
Next post வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு தமிழர் பலி