குற்றவாளியின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என்பதால் நீதி கிடைக்காது -ரஷ்ய பெண்

Read Time:3 Minute, 11 Second

ANI.!!தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தனது நண்பரை கொலைசெய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின்முன் நிறுத்தப்படப் போவதில்லை என ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு இலங்கையின் ஆளும்கட்சி உள்ளுர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இச் சம்பவத்துக்குப் பின்னர் முதல்முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்ய மொழி பட்டதாரியாவார். அவருடன் இலங்கையில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆண் நண்பரான பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான செஞ்சிலுவைப் பணியாளரான குரம் சேய்க் என்பவரே கொலை செய்யப்பட்டார்.

தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி குரம் சேய்க்கை கொலைசெய்த குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என அச்சம் கொள்வதாக கச்சேவா கூறியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த உள்ளுர் அரசியல்வாதி ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அங்கு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பே இல்லை, ஆனாலும் நீதி நிலைநாட்டப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை என்றும் கச்சேவா தெரிவித்துள்ளார்.

எனக்குத் தெரியும், எனது இடத்தில் குரம் இருந்திருந்தால், இறுதிவரை செல்வார், அது என்னவோ அதையே நானும் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது விடயமாக கைதானவர்கள் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி கடந்த நவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போது, நான் அழிக்கப்பட்டு விட்டேன். இச் சம்பவத்துடன் தொடர்டையவர்களை கண்டுபிடிக்க, மரபணு சான்று அறிக்கைக்காக காத்திருப்பதாக கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியதிர்ச்சி இடிபாடுகளுக்கிடையில் மூன்றுமாத குழந்தை மீட்பு
Next post வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு