சீனாவில் பூமியதிர்ச்சி, 179 பேர் பலி

Read Time:1 Minute, 45 Second

chinaசீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 6700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை 8:02 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

அதேவேளை சீனாவின் நிலநடுக்க ஆய்வகம் 7.0 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி எனத் தெரிவித்திருந்தது. இதில் சிச்சுஆன் மாகாணத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 20 விநாடிகள் வரையில் நீடித்த இப்பூமியதிர்ச்சியில் இதுவரையில் 179 உயிரிழந்துள்ளதுடன் சுமார் 6700 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல மாடிக்கட்டங்கள் சரிந்து வீழ்ந்துள்ளது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது இதனாலேயே பாதிப்புகளும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு துரிதமாக மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் சீனாவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..
Next post இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது