புல்மோட்டை இரட்டைக்கொலை விடயத்தில் உறவுக்கார பெண் கைது

Read Time:2 Minute, 22 Second

arrest-girlதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை மகசென்புர என்ற கிராமத்தில் நள்ளிரவு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.

மகசென்புர என்ற கிராமத்தைச் சேர்ந்த எச்.எம். சூரியபண்டார (வயது 38), மற்றும் அவரது மனைவி ஜீவனிஅனுரதிக்கா (வயது 36) ஆகியோர் நேற்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டனர். கோடரியால் வெட்டப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உறவுக்கார பெண்ணே அவ்விருவரையும் கொலைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தேகநபரான இளம்பெண் கொல்லப்பட்டவர்களுடன் அதே வீட்டில் தங்கியிருந்த அதேவேளை கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளான நிமாலி பிரியதர்சினி (வயது 15) செவ்வந்தி பிரியதர்சினி (வயது 8) ஆகியோரை கொலைச்சம்பவத்தின் பின் தன்னுடன் அழைத்துக்கொண்டு இன்று அதிகாலை திருமலையிலிருநு;து ஜாஎல பிதேசத்திற்கு தப்பிச்சென்றுள்ளார்.

பொலிசாரின் தீவிர விசாரனையை அடுத்து கொலைச்சந்தேக நபரும் அவருடன் சென்ற இரு பெண் பிள்ளைகளும்; hஎல பொலிசாரினால் இன்றுபகல் கைது செய்யப்பட்டனர்.

கொலைச் சந்தேகநபரான இளம் பெண்ணுக்கும் கொல்லப்பட்டவர்களின் மூத்த மகளுக்கும் இடையே ஒருபால் உறவு இருந்ததாகவும் அதனை பெற்றோர் கண்டித்ததை அடுத்தே கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரைணை மூலம் அறிய முடிந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Next post தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..