வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாயம்

Read Time:3 Minute, 27 Second

ANI.money.2உலக உணவூத்திட்ட நிறுவனம் தாம் பாவித்த பொருட்கள் சிலவற்றை வவுனியா நகரசபைக்கு வழங்கிய நிலையில் அந்த பொருட்கள் மாயமாகியூள்ளன. இவை எவரும் அறியாதவகையில் நகரசபை அதிகாரிகளால் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து, வட மாகாண ஆளுநர் உட்பட அதிகாரிகளுக்கு வவுனியா நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் முறைப்பாட்டு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2011ம் ஆண்டு யூலை மாதம் ஐ.நா உலக உணவூத்திட்டட நிறுவனம், தாம் பயன்படுத்திய பொருட்கள் பலவற்றை வவுனியா நகரசபைக்கு கையளித்திருந்தனர். எனினும் இந்தப் பொருட்கள் நகரசபையினர், எவரும் அறியாத வகையில் தனியார் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையின் செயலாளரை கடந்த 9ம் திகதி கேட்ட போது, குறித்த பொருட்கள் நகரசபைக்கு வரவில்லை எனவும் கணக்காய்வில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நகரசபையின் தலைவருக்கு இவ் விடயம் தொடர்பில் மறுநாள் முறையிட்ட போதிலும் அவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வடமாகாண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நகரசபை தலைவருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டு கடிதத்தின் பிரதியூம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவூத்திட்டத்தினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பொருட்களின் விபரங்களின் பிரதியூம் வட மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா நகரசபையின் தலைவர் ஐ.கனகையா தெரிவிக்கையில், உலக உணவூத்திட்ட நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் கிடைத்ததாகவும், அவற்றை பொது சுகாதாரப் பரிசோதகரிடம் தாம் ஒப்படைத்ததாகவும், இவை குறித்து தான் செயலருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் குறித்த பொருட்கள் எங்கே என்று கேட்டதற்கு, அவை குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி சபைக் கூட்டத்தில் தௌpவுபடுத்தப்படும் எனவூம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து சபையின் செயலர் கருத்துரைக்கையில், தலைவரால் என்னிடம் எந்த விவரங்களும் தரப்படவில்லை. குறித்த முறைப்பாட்டாளர் மீது நான் தான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 19.04.2013
Next post த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்