மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிடையே 10 மாதக் குழந்தை மீட்பு

Read Time:2 Minute, 6 Second

question-blueஇந்தியாவின் மும்பையிலுள்ள தானே எனுமிடத்திற்கு அருகே கட்டப்பட்டுக்கொண்ருந்த 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 பேராக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் 29 மணி நேரத்திற்குப் பின்னர் 10 மாதக் குழந்தை ஒன்று உயிருடன் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 43 மணி நேரமாக நடந்த மீட்புப் பணி நேற்று மதியம் முடிவடைந்தது. குறித்த கட்டடத்தில் ஏற்கனவே இருந்த நான்கு மாடி வீடுகளில் வசித்தவர்களும் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளர்களுமே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருந்தவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் நிவாரண மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்டனர். இதில் 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 72 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இறந்தவர்களில் 22 பெண்களும் 17 குழந்தைகளும் உள்ளடக்கம். மீட்கப்பட்டவர்களில் 36 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கட்டடத்தை கட்டியவர்களுடன் ஆதரவாகவும் பணியில் கவனக் குறைவாக இருந்தமைக்காக தானே மாநகராட்சி துணை ஆணையர் தீபக் சவான் மற்றும் கட்டடம் கட்டப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக் காதலால் அயல்வீட்டு பெண்ணுடன் சேர்ந்து நஞ்சருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை
Next post மேலாடையின்றி 12 ஆயிரம் தேனிக்களுடன் நடனமாடும் மங்கை