இந்திய வம்சாவளி பெண் வக்கீலின் அழகை புகழ்ந்து தள்ளும் ஒபாமா!

Read Time:2 Minute, 47 Second

1251439475usஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அட்டர்னி ஜென்ரலின் அழகை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகழ்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை, அட்டர்னி ஜெனரலாக ஜனாதிபதி ஓபாமா சமீபத்தில் நியமித்தார்.

இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் தேசிய ஜனநாயக குழுவுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜனாதிபதி ஒபாமாவும், அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிசும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ‘‘அட்டர்னி ஜென்ரல் கமலா ஹாரிஸ், மிக திறமையானவர், கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், எப்போதுமே வழக்குகளை பற்றியே பேசிக் கொண்டிருப்பவர். அதேசமயம், அவர் மிக அழகான அட்டர்னி ஜெனரலும் கூட’’ என்றார். இதைக்கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, ‘‘நான் சொல்வது உண்மைதான்’’ என்று மீண்டும் அழகின் புகழ்ச்சியை பெருமையாக கூறினார்.

இந்நிலையில், ஜனாதிபதி ஒபாமா, பெண் அட்டர்னி ஜென்ரலின் அழகை புகழ்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூயார்க் பத்திரிகையில் எழுத்தாளர் ஜோனாதன் சாட் எழுதியுள்ள கட்டுரையில், ‘‘ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பெண் வக்கீலின் திறமையை மட்டும் புகழாமல், அழகை வர்ணித்தது வெட்கக்கேடானது. பெண்களை எப்போதுமே அவர்களின் திறமையை மட்டுமே வைத்து புகழ வேண்டும். அவர்களது பணித்திறனை அழகை கொண்டு வர்ணிப்பது மோசமான விஷயம்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கருத்துக் கணிப்பு எழுத் தாளர் ஜோனாதன் கேப்ஹார்ட் எழுதியுள்ள செய்தியில், ‘‘ஒபாமாவும், கமலா ஹாரிசும் நீண்ட கால நண்பர்கள். பெண்ணை பற்றி ஜனாதிபதி, மோசமான பேயாக வர்ணிக்கவில்லை. உண்மையிலேயே அவரின் கருத்தில் வேறு அர்த்தங்கள் இருப்பதாக தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

1251439475us

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை சீண்டும் ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்
Next post உருகுலைந்த சிங்ககொடிகளை விற்ற வர்த்தகர்கள் அறுவருக்கு சிறை