உண்ணாவிரத்தில் ரஜினி, கமல், அஜித் பங்கேற்பு : இலங்கை மீது பொருளாதாரத் தடை உட்பட 7 தீர்மானங்கள் (PHOTOS)
தென்னிந்திய நடிகர் சங்க சார்பில் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, பிரபு, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பங்குகொண்டுள்ளனர்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஹவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்தனர்.
இந்நிலையிலேயே நடிகர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கினர்.
இன்று அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் வளாகத்தில் ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிவுற்றது.
இதில் ரஜினி, கமல், அஜித், பிரபு, சத்ராஜ், சூர்யா, கார்த்தி, அர்ஜுன், தனுஷ், விஷால், பரத், அருண் விஜய், பவர் ஸ்டார், விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பாண்டிய ராஜ், ஆனந்த ராஜ், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, போண்டா மணி, ராதாரவி, ராஜேஸ், ரமேஸ் கண்ணா, ஜீவா, விஷ்னு, பராட்டா சூரி, அம்பிகா, தன்சிகா, நமீதா உள்ளிட்ட மேலும் பல கலை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் சரத் குமார் மற்றும் அஜித் உள்ளிட்ட மேலும் சிலர் காலையில் இருந்து மாலை வரை உண்ணாவிரதப் பந்ததில் இருந்தனர்.
இந்நிகழ்விற்காக அஜித் தனது படத்தின் ஆரம்ப விழாவினை ஒத்தி வைத்துவிட்டு கால் உபாதையுடன் கலந்து கொண்டு தமிழர்களுக்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார்.
ரஜினி காலை 11 மணியளவில் வந்து 2 மணியளில் சென்றார். இறுதியில் கமல் ஹாசன் மாலை 4 மணிக்கு வந்து இறுதிவரை கலந்துகொண்டார்.
இதன் போது சர்வதேச நீதியான விசாரணை மற்றும் இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 7 தீர்மானங்களை வெளியிட்டது தென்னிந்திய நடிகர் சங்கம்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 2000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் தவிர, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
அண்மையில் இயக்குனர்கள் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் தலைமையில் சில நாட்களுக்கு முன்னர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Average Rating