கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது தாக்குதல்

Read Time:2 Minute, 4 Second

tnaகிளிநொச்சியல் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்கள் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வேளையில் இலங்கை தேசியக் கொடியை ஏந்தி வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொணடதாக சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். இம்மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சரவணபவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினர், குண்டர்கள் மற்றும் படையினர் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாமென சந்தேகிப்பதாக சுரேஸ் எம்.பி கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடியதாகவும் இதன் காரணமாக பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சூர்யா கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்
Next post மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி