மிருகக்காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி

Read Time:1 Minute, 56 Second

Ani.Tiger.8கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிருகச் காட்சி சாலையில் பணியாற்றி கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் புலி தூங்கி கொண்டிருக்கின்றது என நினைத்து கூண்டிற்குள் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த புலி எதிர்பாராத விதமாக அவரை தாக்கியுள்ளது.

மிருகக்காட்சி சாலையின் இயக்குனரான லாரோன் கேக்னானிடம்( Lauraine Gagnon) இது குறித்து கேட்ட பொழுது, இந்த மிருகக் காட்சிசாலை ஆரம்பித்து 58 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இதுவரை எந்த அசம்பாவிதமும் இங்கு நடந்தது இல்லை.

ஆனால் தற்பொழுது நடந்துள்ள இந்த சம்பவம் அனைவருக்கும் வருத்ததை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தற்பொழுது இந்தப் புலியைத் தனியாக அடைத்து வைத்துள்ளதாகவும், இதைக் கொன்று விட்டதாகச் சொல்வது வெறும் வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலி தாக்கிய அந்த மூத்த பணியாளர் ஆழமான காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கியுபெக்கின் மாநிலப் பொலிசாரும், பணியிடப் பாதுகாப்பு வாரியமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோவில்) “குரங்கும் அவரது அன்பு நண்பராகத் திகழும் சேவலும்”..
Next post இன்றைய ராசிபலன்கள்: 30.03.2013