கால்பந்து: ஆஸ்திரேலியா -செக் -இத்தாலி அணிகள் வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவும், செக் குடியரசும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வெற்றி பெற்றது. செக் குடியரசு ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஜான் கோலர் தனது தலையால் முதல் கோலை போட்டு அசத்தினர்.
பின்னர் அமெரிக்க கேப்டன் கிளாடிய ரெய்னா ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் 25 மீட்டர் துõரத்தில் இருந்து ஷாட் அடித்தார். அந்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்றது. இதனால் கோல் பெறும் வாய்ப்பு அந்த அணிக்குக் கிடைக்கவில்லை.
பிறகு செக் குடியரசின் தாமஸ் ரோசிக்கி ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் 25 மீட்டர் துõரத்தில் இருந்து அருமையான ஒரு கோல் அடித்தார். இதனால் செக் குடியரசு 2-0 என்ற முன்னிலை பெற்றது.
பின்னர் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் காயம் காரணமாக ஜான் கோலர் வெளியேறிய போது, முதல் பாதி முடிவு பெற்றது இதில் செக் குடியரசு 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது பாதியில் மீண்டும் தாமஸ் ரோசிக்கி மற்றொரு அருமையான கோல் அடித்தார். இதனால் செக் குடியரசு 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் செக் குடியரசு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கைசர்ஸ்லைடர்ன்சில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கால்பந்து தொடரின் முதல் முதலாக விளையாடிய ஆஸ்திரேலியா, ஜப்பானை 3-1 என்ற கோல் கனக்கில் வென்றது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.
இன்னொரு ஆட்டத்தில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள பலம் வாய்ந்த இத்தாலியும், முதல் முதலாக களம் இறங்கிய கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியின் வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதனால் இத்தாலி அணி போராடி வெற்றி பெற்றது.
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி, கானா வீரர்களின் ஆட்டத்தில் பிரமித்துப் போயினர். இத்தாலி அணி இந்த அணியை எதிர்த்து எளிதில் கோல் அடிக்க முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பிறகு ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தான் முதல் கோல் அடித்தது இத்தாலி அணி. இந்த கோலை அட்ரியேர பிர்லோ அடித்தார்.
முதல் பாதியின் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கானா அணியின் கோல் கீப்பர் கிங்ஸ்டன் ரிச்சர்டு சிறப்பாக செயல்பட்டார். இவர் இத்தாலி வீரர்கள் ஆட்டத்தின் 50,66 நிமிடத்தில் கோல் அடிக்க முயன்றனர். அதை சிறப்பாக பாய்ந்து தடுத்தார்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலி அணி 2 கோலை அடித்தது. இதை அந்த அணியின் வின்சென்சோ பேக் பாஸ் மூலம் இந்த கோலை அடித்தார். ஆட்டம் முடியும் வரை போராடியும் கானா அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நேர முடிவில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை போராடி வெற்றி பெற்றனர்.