அரசாங்க கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது -இரா. சம்பந்தன்

Read Time:1 Minute, 49 Second

tna.sampantanஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரவில்லை. தமது சொந்த நிகழ்ச்சி நிரலான வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மேலும் மாற்றியமைக்கவும் மொழி, கலாசார ரீதியான அடையாளங்களை இல்லாதொழிப்பதற்குமே அரசாங்கம் முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கோ முயற்சித்து வருகின்றது என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் எந்த விடயத்திலும் இதுவரை நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் செயற்படவில்லை. இந்நிலையில், அரசாங்ம் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கோ கால அவகாசம் கோரவில்லை. மாறாக வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெற்காசியாவிலேயே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலை
Next post தந்தை ஒருவரால் தனது 13 வயது நிரம்பிய மகள் கத்தி குத்துக்கு இலக்காகி பலி