ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டமாக்குவதை எதிர்த்து பிரான்ஸில் பேரணி (VIDEO)

Read Time:1 Minute, 54 Second

homosexualityபிரான்ஸில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக் கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நேற்று முன்­தினம் பாரிஸ் நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அது, அடுத்த மாதம் பிரான்ஸ் செனட் சபையில் ஒப்புதலுக்காக கொண்டுவரப்படவுள்ளது. மேலும் அண்­மையில் நடந்த பொதுக்கருத்து கணிப்புகளும் ஓரினச் சேர்க்கையை சட்டமாக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்கிறது. பிரான்ஸ் ஜனா­தி­ப­தி பிராங்காய்ஸ் ஹொலந்தேயுனுடைய சமுதாய கட்சியும்இ அவரது ஆதரவு கட்சிகளும் இருசபையிலும் செல்வாக்குடன் இருப்பதால் அந்த ஓரினச்சேர்க்கை அங்கீகார மசோதா வெற்றிபெறும் நிலை உள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நேற்று முன்­தினம் பாரிஸ் நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். வலது சாரி அமைப்புகளின் ஆதரவுடன் அவர்கள் ஜனா­தி­பதி மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும் பொலி­ஸ­ாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் பொலி­ஸார் தடியடி கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதி அறையை எட்டிப் பார்த்த இளைஞனின் கைவிரல்களை வெட்டிய ஆசிரியை!
Next post மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை