ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதி

Read Time:1 Minute, 45 Second

theeதமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தின் அருகே நடுரோட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட 23வயதான ஆனந்த என்பவர் எரிந்து கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை காலால் உதைத்துள்ளார். இதனையடுத்து, திடீரென அவரின் உடையில் தீப்பற்றியது. சட்டையில் பற்றிய தீ உடலிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
Next post இலங்கைத் தமிழர்களுக்காக மாணவி தற்கொலை