நவநீதம்பிள்ளை வரம்பைமீறி செயற்படுகிறார் -அமைச்சர் சமரசிங்க குற்றச்சாட்டு

Read Time:1 Minute, 43 Second

slk.mahinda_samarasingheஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பைமீறி இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று உரையாற்றியபோது குறிப்பிட்டுள்ளார். நவநீதம்பிள்ளை தாரித்துள்ள அறிக்கையில் இடைக்கிடையே ஐநா நிபுணர் குழு அறிக்கையில் உள்ள விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்hளர். ஆவர் சுட்டிக்காட்டியவற்றை நீக்குமாறு நாம் நவிபிள்ளையிடம் கோரினோம். அதற்கு காரணம் ஐநா நிபுணர்குழு என்பது பான் கீ மூனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவாகும். அது ஐநா அமைப்பினாலோ சர்வதேச நாடுகளினாலோ அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. அதற்கு சட்டபூர்வ அதிகாரங்களும் கிடையாது. இலங்கைக்கு வருமாறு நவிபிள்ளைக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை. எனினும் தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு அவர் செல்கிறார். இது விசனத்தை ஏற்படுத்துகிறது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்
Next post பார்வையால் கவர்ந்திழுக்கும் பிளேபோய் மொடல் (PHOTOS)