உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (17.03.2013)
மேஷம்:
இன்று, சிலர் போட்டி, பந்தயத்தில் கலந்து கொள்ள உங்களை அழைப்பர். சமயோசிதமாக விலகுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு, நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத அழகு, சாதனப் பொருள் பயன்படுத்த வேண்டாம்.
ரிஷபம்:
இன்று, இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் வளரும். பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணவரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.
மிதுனம்:
இன்று, நீங்கள் அடுத்தவர் விவகாரத்தில், கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். உடல்நலம் சீர்பெற, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
கடகம்:
இன்று, உங்களைச் சுற்றி நிலவுகின்ற, சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். அதிக உழைப்பினால், பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். புத்திரரின் நற்செயல், பெருமை தேடித்தரும்.
சிம்மம்:
இன்று, உங்களின் பணியை திறம்பட நிறைவேற்றுகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட வெற்றி, எளிதாக கிடைக்கும். தொழில்,வியாபாரம் செழித்து குடும்ப உறுப்பினர்களை மகிழ்விக்கும். பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர் சிறப்பாக பணி செய்து நற்பெயர், வெகுமதி பெறுவர்.
கன்னி:
இன்று, உங்கள் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குடும்ப செலவுகளுக்கு ஏற்ப, சிறுஅளவில் பணக்கடன் பெறுவீர்கள். நண்பரிடம், தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். கண்களின் பாதுகாப்பில், கூடுதல் கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று, மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். பகைமை குணம் உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தன்மைகளை பாதுகாத்துக் கொள்வது நல்லது. புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். சொத்து ஆவணம், பிறர் பொறுப்பில் தரவேண்டாம்.
விருச்சிகம்:
இன்று, நற்குணம் உள்ளவர்களின் நட்பு, உதவி எளிதாக கிடைக்கும். திகைப்பு தந்த பணியை, முயற்சியுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
தனுசு:
இன்று, சமூக நிகழ்வில் இனிய அனுபவம் பெறுவீர்கள். பிறரை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்:
இன்று, உங்கள் உறவினர் ஒருவரின் பாசம் வியப்பைத் தரும். தொழில், வியாபாரத்தில் ஆரவாத்தன்மை தவிர்த்து, செயல்படுவது நன்மை பெற உதவும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்கும்.
கும்பம்:
இன்று, உங்கள் மனம் விரும்பாத நிகழ்ச்சியில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு அளவிலான குளறுபடி ஏற்படலாம். நிதான அணுகுமுறை, நன்மை பெற உதவும். சேமிப்பு பணம், முக்கிய செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகை, உண்ண வேண்டாம்.
மீனம்:
இன்று, அக்கம்பக்கத்தவருடன், உங்கள் மீதான அன்பு வளரும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் விலகும். தொழில் வளர்ச்சிப்பணி, இனிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
Average Rating