கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் (VIDEO)

Read Time:2 Minute, 0 Second

mqdefault (55)அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், கணனி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை, நகலெடுத்தல் மற்றும் குறியீடு தொடர்புகளை சிறப்பிக்கும் வண்ணம் புதுமைகளைப் புகுத்தி வருகின்றது.

கூகுள் கண்ணாடி மூலம் கைகளின் உதவி இல்லாமல், வலைத்தள தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று காட்டிய இந்நிறுவனம், தற்போது பேசும் காலணிகளை இவர்களின் விளம்பர உத்திக்காக வெளியிட்டுள்ளனர்.

அடிடாஸ் நிறுவனத்தின் விளையாட்டுக் காலணிகளைத் தெரிவு செய்து, சிறிய கணனி, ஆக்சிலரோமீட்டர், கைராஸ்கோப், அழுத்தத்தைக் குறிக்கும் சென்சார்கள், ஒலிபெருக்கி மற்றும் புளூ டூத் போன்றவற்றைப் பொருத்தியுள்ளனர்.

ஒருவர் இந்தக் காலணிகளை அணிந்துகொண்டால், அவர்கள் செய்துகொண்டிருப்பதை புளூ டூத் மூலம் அவரின் தொலைபேசிக்கோ, ஒலிபெருக்கி மூலம் அவருக்கோ தகவல் பெறமுடியும்.

இந்த முயற்சி, ஒருவர், தான் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் வலைத்தளத்தில் தகவல்கள் கூறலாம் என்பதை தெரிவிப்பதாக, இந்த விளம்பர மையத்தின் அதிகாரி, அமான் கோவில் கூறுகின்றார்.

இதனை நகலெடுத்து உருவகப்படுத்தினால், இந்தக் காலணிகள் பேசும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக சாதனைக்காக தனது தாடியால் பெண்ணைத் தூக்கும் மனிதன்… (VIDEO)
Next post தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம்