பெண்களை மட்டம் தட்டுவோர் சின்ன புத்திக்காரர்கள் : நயன்தாரா கோபம்

Read Time:2 Minute, 15 Second

nayanatara53பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் பெண்களை மட்டம் தட்டுகிறார்கள். இதற்காக அடங்கி ஒடுங்கிவிட மாட்டோம்’ என்றார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது:

பெண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் சின்ன புத்தி கொண்டவர்கள், பரந்த மனம் இல்லாதவர்கள் அவர்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அவற்றை வென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும்.

அதையும் தாண்டி மற்றவற்றிலும் சாதிக்க முடியும். நிதி சம்பந்தமான பிரச்னைகளையும் பேசி அமல்படுத்த முடியும். சாதிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித்திருக்கிறேன். நான் செய்யும் நற்பணிகள்பற்றியோ மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வரவில்லை.

என்னுடைய வேலையை குறிப்பிட்டு சொல்கிறேன். எங்களுக்குள்ள இமேஜ் அல்லது கவர்ச்சியாலோ மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம்விட அதிகம் பெண்களால் சாதிக்க முடியும்.
பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் உணர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலியா, மெல்போனில் நடைபெற்ற நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள் !! (PHOTOS)
Next post 100% கஜினியாகவே மாறியிருக்கும் துமிந்த சில்வா…!! (PHOTPS)