கள்ளக் காதலியை கொலை செய்து உடலை நாய்க்கு போட்ட பிரபல கால்பந்து வீரர்!
பிரேசிலைச் சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசா தமது கள்ளக் காதலியை கடத்தி கொலை செய்து அவரது உடலை துண்டுகளாக்கி பாகங்கள் சிலவற்றை தமது நாய்களுக்கு உணவாகப் போட்ட பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. இவரது கள்ளக் காதலி எலீசா சமுடியோ.
இருவருக்கும் இடையேயான உறவில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை விஷயத்தில் ப்ரூனோ தொடக்கம் முதலே விரும்பவில்லை. ப்ரூனோவின் எதிர்ப்பையும் மீறி எலீசா குழந்தை பெற்றெடுத்தது ப்ரூனோவுக்கு எரிச்சலாகி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து தமது நண்பரும் போலீஸ் அதிகாரியுடமான சாண்டோஸ் என்பவரை அணுகி எலீசாவை கொலை செய்யக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ரியோடிஜெனிரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்திய லூயிஸ், பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்.
அதன் பின்னர் ப்ரூனோ முன்னிலையில் எலீசா கொல்லப்பட்டிருக்கிறார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.
எலீசாவின் சில பாகங்களை தமது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டுவிட்டு உடல் பாகங்களை வீட்டிலேயே கான்கிரீட் வைத்து பூசி புதைத்துவிட்டார் ப்ரூனோ.
இந்தக் கொடூர கொலை தொடர்பாக ப்ரூனோ, அவரது மனைவி உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடக்கத்தில் தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தே வந்தார் ப்ரூனோ.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது அவர், எலீசாவை கொலை செய்து உடல் துண்டுகளை நாய்க்குப் போட்டதை ஒப்புக் கொண்டார்.
ப்ரூனோ குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 40 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ரூனோவின் கனவு தகர்ந்து போனது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating