இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள்

Read Time:2 Minute, 49 Second

india-sri-lankaஇலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் கடந்த மூன்று வருடங்களாக இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருந்து வருவாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சுமத்தியூள்ளது. இது இவ்வாறிருக்கஇ ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை உடனே வெளிப்படுத்த வேண்டும் என்று மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கை தமிழர்களின் விடயத்தை சர்வதேச விடயமாக பார்க்க வேண்டுமே தவிரஇ அதனை உள்நாட்டு அரசியலில் கழந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை உள்நாட்டு அரசியல் அளவூக்கு அதிகமாக களக்கும் போதுஇ அரசியல் பிளவூகளுக்கு வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்இ திராவிட முன்னேற்றக் கழகம்இ இலங்கையின் கொலைக்களம் காணொளியை தயாரித்த செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரேவை கொண்டு போலியாக பிரசாரம் மேற்கொண்டிருந்தமை வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளையூம்இ அதன் உப தலைவர் மு.க. ஸ்டாலினையூம் கெல்லம் மேக்ரே பாராட்டி இருந்ததாகஇ தி.மு.க பிரசாரம் செய்து வந்தது. எனினும் இந்த விடயத்தை கெல்லம் மெக்ரேவின் டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வியாக தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் வழங்கியூள்ள கெல்லம் மேக்ரேஇ தி.மு.கவின் இந்த கருத்தை நிராகரித்துடன்இ தாம் எந்த ஒரு தரப்பையூம் இந்த விடயத்தில் பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சுடு, கோசல வர்ணகுலசுரிய மறுப்பு
Next post ஏறாவூர் மீராக்கேணி பகுதியில் பாடசாலைச் சிறுமி கடத்தப்பட்டு தோடு களவூ