அடம்பன், நெடுங்கேணியில் குடிநீர் விநியோகத் திட்டம்

Read Time:3 Minute, 14 Second

DSC_2473மன்னாரிலுள்ள அடம்பன் மற்றும் வவூனியாவின் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் 472 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் அதிதிகளாக பங்கேற்று மேற்படி குடிநீர் திட்டத்தை பொதுமக்களின் பாவனைக்கு நேற்று கையளித்துள்ளனர். 472 மில்லியன் ரூபா செலவில் மன்னாரிலுள்ள அடம்பன் மற்றும் வவூனியாவிலுள்ள நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் நேற்று புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இரு குடிநீர் விநியோகத் திட்டத்தின்மூலம் 16 கிராம சேவகர் பிரிவூகளைச் சேர்ந்த சுமார் 12,594 பொதுமக்கள் நன்மையடைகின்றனர். 295 மில்லியன் செலவில் அடம்பனில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குடிநீர் விநியோகத் திட்டத்தின்மூலம் அடம்பன், வேட்டையான்முறிப்பு, பாப்பாமோட்டை, மாளிகைத்திடல், மினுக்கன், சொர்ணபுரி, பாலைக்குழி, நெடுங்கண்டல் ஆகிய கிராமசேவகர் பிரிவூகளுக்கு நீர் விநியோகிக்கப்படவூள்ளதுடன், இதனூடாக 6000க்கும் அதிமானவர்கள் நன்மையடையவூள்ளனர். 225 கனமீற்றர் கொள்ளளவூ உடைய நீர்த்தாங்கி, அலுவலகம், களஞ்சிய அறை, பம்பிகள், விடுதி அத்துடன் 3 கிலோமீற்றர் நீளமான நீர் குழாய்களையூம்இ புனரமைக்கப்பட்ட 185 கனமீற்றர் கொள்ளளவூடைய நிலத்தின் கீழ் சேமிப்பு தொட்டியூம் அமைக்கப்பட்டுள்ளன. 175 மில்லியன் செலவில் நெடுங்கேணியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குடிநீர் திட்டத்தின்மூலம் நெடுங்கேணி வடக்கு, நெடுங்கேணி தெற்கு, ஒலுமடு, மாமடு, சேனைபுலவூ ஆகிய கிராமசேவகர் பிரிவூகளின் 6000க்கும் அதிகமானவர்கள் நன்மையடையவூள்ளனர். இங்கும் 225 கனமீற்றர் கொள்ளளவூடைய நீர்த்தாங்கி, அலுவலகம், களஞ்சியஅறை, பம்பிஅறை, விடுதிவசதி அத்துடன் 12.5 கிலோமீற்றர் நீளமான நீர் குழாய்கள், புனரமைக்கப்பட்ட 75கனமீற்றர் கொள்ளளவூடைய நீர்த்தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச உதவிகள் தடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் குற்றச்சாட்டு
Next post இன்றைய ராசிபலன்கள்:04.03.2013