முல்லைத்தீவில் 1455 முஸ்லிம்களுக்கு தலா அரை ஏக்கர் காணி

Read Time:2 Minute, 32 Second

mullaiteevuமுல்லைத்தீவூ மாவட்டத்தில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான்இ கூழாமுறிப்பு பகுதிகளில் தலா அரை ஏக்கர் வீதம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். யூத்தம் காரணமாக முல்லைதீவூ மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டு சுமுகமான நிலைமையில் அவர்கள் மீள் குடியேறி வருகின்றனர். இவர்களில் பலர் குடியிருப்பதற்கு காணியற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான்இ கூழாமுறிப்பு பிரதேசத்தில் தலா அரை ஏக்கர் காணி வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன்படி வண்ணான்குளம் 109இ முல்லைப்பட்டினம் 153இ கள்ளப்பாடு தெற்கு 20இ செல்வபுரம் 3இ உப்புமாவெளி 15இ கள்ளப்பாடு வடக்கு 22இ நீராவிப்பிட்டி மேற்கு 275இ நீராவிப்பிட்டி கிழக்கு 304இ ஹிஜ்ஜிராபுரம் 391இ தண்ணீரூற்று மேற்கு 32இ தண்ணீரூற்று கிஇழக்கு 90இ இமாரபுரம் 41 என மொத்தம் 1455 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. காணியற்றௌருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட செயலணி மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதி பெற்றே காணி வழங்கப்படுகின்றன. காணியற்ற எல்லோருக்கும் இன பாகுபாடு இன்றி காணி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவூ மாவட்டத்தில் வசித்து இடம்பெயர்ந்து சென்று மீள் குடியேற்றத்திற்காக வரும் காணியற்ற குடும்பங்களுக்கு மட்டுமே காணி வழங்கப்படவூள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான நினைவூப் படிகம் உடைப்பு
Next post இலங்கை விடயத்தில் ஐ.நாவின் செயற்பாடு குறித்த அறிக்கைக்கு நவிப்பிள்ளை வரவேற்பு