எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா
எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா
விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும் சினிமா வட்டாரத்தில் தனக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார்.
இருந்தாலும், இசையமைப்பாளர் அனிருத்துடன் முத்தம் கொடுப்பது போல் வெளியான படங்கள், மேலும் மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தருடன் காதல் என்று அவ்வப்போது வெளிவரும் செய்திகள் அவரது மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, சுந்தரும் நானும் நல்ல நண்பர்கள் தான். எங்களுடைய நட்பு நீண்டநாள் உள்ளது. இதைத்தவிர வேறு எந்த வகையான விஷயமும் எங்களிடையே இல்லை. இதை பலமுறை கூறிவிட்டேன். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளியாவது வருத்தமாக இருக்கிறது என சோகத்துடன் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் கமலஹாசனைப் பற்றி பேசும்போது, அவர் நடிப்பு ஜீனியஸ். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். எப்பவும் நான் கொஞ்சம் அதிகமாகவே பேசுவேன். ஆனால், கமலுக்கு முன்னால் எனக்கு பேச்சே வராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating