இலங்கை எதிரி நாடு அல்ல, இந்தியா பெரியண்ணனும் அல்ல -சல்மான் குர்ஷித்

Read Time:2 Minute, 54 Second

indiaஇலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைப் பற்றி எதுவூம் சொல்லமுடியாது என மத்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் சல்மான் குர்ஷித் பேசுகையில்இ இலங்கை அண்டை நாடு. வேறு ஒரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது. இலங்கையில் போர் நடைபெற்ற காலம் அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காலமாகும். போர் தொடர்பான வெளியான காட்சிகள் மனதைப் பிசைகின்றன. உறுப்பினர்கள் உருக்கமான கருத்தை நாங்கள் மதிக்கிறௌம். இலங்கை தமிழர் பிரச்சனை என்பது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் மொத்த பிரச்சனையாக கருதுகிறௌம். அமெரிக்கா ஒரு விஷயம் செய்கிறது என்பதற்காக நாமும் அப்படி செய்ய வேண்டும் என்பது அல்ல. ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நாம் ஆதரித்தோம். அதன் பின்னர் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதும் அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அந்த ஜெனிவா தீர்மானம் பற்றிய எம்.பிக்களின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும். தற்போது எதுவூம் சொல்லமுடியாது. இலங்கையைப் பொறுத்தவரையில் எதிரி நாடு என்று நாம் சொல்ல முடியாது. ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படவே இந்தியா விரும்புகிறது. இந்தியா பெரியண்ணன் என்ற நிலையோடு நடந்துகொள்ள முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு 13-வது அரசியல் திருத்தம்தான் அடிப்படையானது. தமிழருக்குத் தன்னாட்சி வழங்க இந்தியா வலியூறுத்தி வருகிறது. தமிழர்கள் வாழும் வடக்கில் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல்தான் அரசியல் தீர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி.. (வீடியோ)
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்.. (PHOTOS)