தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி.. (வீடியோ)
தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி. அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர்.
தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்த . பார்த்தசாரதி எம்.எல்.ஏ. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. விஜயகாந்த் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தார். இதனால் கீழே விழும் நிலைக்குப் போய் விட்டார் அவர். அவர் அணிந்த கண்ணாடி விழக் கூடிய நிலை ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் விஜயகாந்த் அப்படியே ஆடிப்போய்விட்டார்…
பலமாக அடி வாங்கிய விஜயகாந்த் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருங்கப்பா என்று மட்டும் விழிபிதுங்க சொல்லிக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபடி நின்றார். ஆனால் அடித்த . பார்த்தசாரதி எம்.எல்.ஏ.வோ கண்டுகொள்ளாமல் கூட்டத்தை நகர்த்துவதாகவே காட்டிக் கொண்டிருந்தார். அப்படி அவர் செய்ததால் திட்டமிட்டே அவர் விஜயகாந்தை தாக்கினாரா?
ஆஹா தலைவர் மேல அடி விழுந்துருச்சே..அவர் பக்கம் முகத்தை காண்பித்தால் அவ்ளோதான் என்று நினைத்து கூட்டத்தைக் கலைப்பதாக ‘பாவ்லா’ செய்தாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.
ஒருவழியாக கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை ‘பாதுகாப்பாக’ அழைத்துக் கொண்டு போய் நீதிமன்றத்துக்குள் அனுப்பி வைத்தனர்.
எல்லோரையும் அடித்து வெளுத்து வாங்கக் கூடிய, சட்டசபையில் நாக்கை துறுத்திப் பேசக் கூடிய தம்மையே தமது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.
பொது இடத்தில் சகட்டுமேனிக்கு அடிக்கக் கூடியவர் விஜயகாந்த்.. அவருக்கே அடி என்றால் அந்த எம்.எல்.ஏ. வின் கதி என்ன ஆகுமோ என்றும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனையோ பணிகள் உள்ள நிலையில் என் மீது பொய் வழக்கு போட்டு அலைக் கழிக்கிறார்கள். எங்கள் கட்சி வளர்ந்து இருப்பதால்தான் வழக்கு போடுகின்றனர். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது பேரிடர் இழப்பு நிதியா? பயிர் காப்பீட்டு நிதியா? மத்திய, மாநில அரசு நிதியா? என்பதை தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
விவசாயிகளை கை தட்டுங்கள் என அமைச்சர் கூறியதை டி.வி.யில் பார்த்தேன். விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாதனை செய்திருந்தால்தானே கை தட்டியிருப்பார்கள் என்றார் அவர்.
Average Rating