இலங்கைக்கான சவூதி தூதுவர் திருப்பி அழைப்பு

Read Time:2 Minute, 16 Second

Slk.Hekaliyaகொழும்பில் உள்ள இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரேபியாவால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டு பழிக்குப்பழி வாங்கப்பட்டமையை அடுத்த இலங்கையின் நடவடிக்கைகளே திருப்பி அழைப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. சவூதியில் உள்ள இலங்கை தூதுவரை திருப்பியழைக்க இலங்கை முடிவூசெய்தது போன்று இலங்கையிலுள்ள சவூதி தூதுவரை திருப்பி அழைக்க சவூதி திர்மானித்துள்ளது. மூதூரைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக் கொலை செய்யப்பட்ட நாள் தொடக்கம் இலங்கைக்கும் சவூதிக்கும் இடையிலான உறவில் சற்று விரிசல் காணப்பட்டே வருகிறது. இந்நிலையில் 25 வயதிற்கும் கீழ்ப்பட்ட பணிப்பெண்களை சவூதிக்கு பணிப்பெண்களாக அனுப்ப இலங்கை அரசு அண்மையில் தடை விதித்தது. சவூதிக்கு பெண்களை அனுப்புவதை தடை செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை இதுவென அரசாங்கம் சார்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார். மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நாடுகள் கண்டனம் வெளியிட்டன. இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் கற்பழிப்புஇ கொலைஇ போதைப் பொருள் கடத்தல்இ சமய இழிவூ மற்றும் ஆயூத கொள்ளை என்பவற்றிற்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2012ல் 76 பேரும் இவ்வருடத்தில் இதுவரை 14 பேரும் சவூதியில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை by Nadchathra​n Chev-Inthi​yan
Next post ரஸ்யா இலங்கைக்கு ஆதரவூ