கேமரூனில் 3 குழந்தைகள் உட்பட 7 பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கடத்தல்

Read Time:1 Minute, 44 Second

00002பிரான்ஸைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் நைஜீரியாவின் எல்லையில் உள்ள வாஷாநகரின் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவர்களை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவர்களை நைஜீரியாவுக்கு கடத்தி சென்றனர். இவர்களை நைஜீரியாவின் வடக்கு பகுதியில் அட்டூழியம் செய்து வரும் போகோஹாரம் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என தெரிகிறது. மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹேலண்டே ஈடுபட்டுள்ளார். இவர்களை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்தியிருந்தால் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் பேரியஸ் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்
Next post 13 வயது மாணவியைக் கற்பழித்த மாமன்!