பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்

Read Time:3 Minute, 11 Second

ltte.pirabakaran-son-jjஇலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் கருத்துக் கூறியபோது தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளது மனித தன்மையற்ற செயல்; மனதையூம் ரத்தத்தையூம் உறைய வைக்கும் விதமாக இலங்கை ராணுவம்இ அப்பாவி தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்ததுஇ இலங்கையில் ஹிட்லர் ஆட்சியை நினைவூபடுத்துவதாக உள்ளது. இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆதாரங்களுடன் வீடியோ வெளியிடப்பட்ட பின்னரும் மத்திய அரசு மவூனம் காப்பது முறையல்ல் இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்வாக ஐ.நா.இவூடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இலங்கை தமிழர்கள் அங்கு முழுமையான குடியூரிமைகளை வாழ்வாதாரங்களை பெறும் வரை இலங்கை மீதான பொருளாதார தடையை நீடிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுஇ அமெரிக்காவூடனும் இன்னும் ஒத்த கருத்துடைய நாடுகளுடனும் கலந்து பேசிஇ இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பாக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவூடன் இணைந்து இலங்கைமீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த இடங்களில் வாழ அனுமதிக்கப்படும் வரைஇ அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக மரியாதையூடன் வாழும் வரை இந்தப் பொருளாதாரத் தடை நீடிக்க வேண்டும். சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றமாகும். இது தொடர்பாக இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தச் செய்ய சர்வதேச நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில் ஐ.நாவில் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்தியா முயற்சிக்கக் கூடாதென சுட்டிக் காட்டியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:20.01.2013
Next post கேமரூனில் 3 குழந்தைகள் உட்பட 7 பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கடத்தல்