பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!

Read Time:1 Minute, 46 Second

ANI.indiaflag.2டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா? இல்லை ஆண்மை நீக்கம் செய்வதா? என்று நாடு முழுவதும் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ரஞ்சியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு விசித்திரமான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த கிராமத்தில் பஞ்சாயத்தாரிடம், குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவனை அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு ஒரு ஆட்டுக்கிடாவை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தனர்.

இதேபோல், அம்மாநிலத்தின் சக்ரதார்பூர் பகுதியில் ஒரு கற்பழிப்பு குற்றவாளிக்கு 5 வெடக் கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியத் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த மாலைதீவு!
Next post திருமணத்திற்கு பணம் தேட வெளிநாடு போய் கையிழந்த இந்திக்கா