கருணா அம்மானின் சகோதரியிடம் பணம் கொடுத்தால் பட்டதாரிகட்கு நியமனம்! ஏனையவர் பாதிப்பு?
இலங்கையில் அரசினால் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக அரச திணைக்களங்களில் உள்வாங்கப்படுவது குறித்து பல்வேறு அரசியல் சாயல்களும் அரசியல் பின்னணிகளும் இடம் பெற்று வருகின்றது என்பது உலகறிந்த உண்மையாகி விட்டது.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் இதுவரையில் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப் படாமையினால் அல்லலுறுவதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான் கரைப்பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பட்டதாரி பயிலுனர்களாக 250 இற்கு மேற்பட்டோர் அனுமதிக்கப் பட்டனர். இவர்களுள் 150 இற்கு மேற்பட்டோர் நிரந்தர நியமனம் பெறும் பட்டியலில் உள்வாங்கப்பட்டு வேறு இடங்களுக்காகவும் கடமைகளுக்குச் சென்றுள்ளனர்.
பிரதியமைச்சர் முரளிதரனின் (கருணா அம்மானின்) சகோதரியிடம் பணம் கொடுத்தல் பட்டதாரிகட்கு நியமனம்
இது ஒரு புறமிருக்க இப்பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமை புரியும் (பயிலுனர் பட்டதாரியான குருமண்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்த கந்தன் -பெயர் மாற்றப்பட்டுள்ளது-) என்பவர் அங்கு பயிலுனராக இணைக்கப் பட்டுள்ள பட்டதாரிகளுடன் தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொண்டு ரூபா ஐம்பத்தினாயிராம் தந்தால் உங்களை ஏதாவது ஒரு திணைக்களத்தில் நிரந்தர நியமனப் பட்டியலில் சேர்த்து கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் பனிரெண்டாம் ஆம் இலக்கத்தில் போட்டியிட்ட பெண்மணியுமான மட்டக்களப்பினைச் சேர்ந்த பிரதியமைச்சர் கருணா அம்மானின் சகோதரியுமானவரிடம் கதைத்து மேற்குறப்பிட்ட பணத்தினை அவரிடம் வழங்கி தங்களை நிரந்தர நியமன பட்டியலில் சேர்த்துக் கொள்வேன் என கூறி வருகின்றரார்.
இவரின் பேச்சசுக்கு செவிசாய்த்த நான்கு பயிலுனர் பட்டதாரிகள் இவ்வாறு ஆளுக்கு ஐம்பதினாயிரம் வீதம் மேற்குறிப்பிட்ட நபருக்கு வழங்கி தங்களுடைய பெயரினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சேர்த்துள்ளனர்.
ஏனையவர்களிடம் இவர் இதுபற்றி கதைத்த போது “எவ்வளவோ கஷ்டப்பட்டு படித்து நாம் காசு கொடுத்து வேலை எடுக்க வேண்டும் என்றால் அது எவ்வாறு சாத்தியம்? இது ஒருபுறமிருக்க வாக்கு கேட்டு வரும் அம்மையாருக்கு நாங்க காசு கொடுக்க தானா வேண்டும்? அப்படி ஒரு வேலை எமக்கு வேண்டாம்” எனவும் பயலுனர் பட்டதாரிகள் (பயிலுனர் பட்டதாரியான குருமண்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்த கந்தன் -பெயர் மாற்றப்பட்டுள்ளது-) என்பவரிடம் கூறியுள்ளார்கள்.
எது எப்படியோ! எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் உழைக்கின்றார்கள் இதற்கு நம்மவர்களும் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்பதை நினைப்பத்தையிட்டு கவலையாக இருக்கின்றது என பட்டதாரிகள் கூறுகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating