கரவெட்டியில் மூன்று பிள்ளைகளின் தாயும் கோண்டாவிலில் இளைஞனும் சடலமாக மீட்பு

Read Time:1 Minute, 24 Second

ANI.candle.8யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி வித்தியாலய வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய மதிமோகன் ராகினி என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய பரராஜசிங்கம் பிரசன்னா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு சடலங்களும் சடலப் பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்று (15) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல கோடியைத் தாண்டிவிட்ட விஸ்வரூபம் வசூல்?
Next post உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!! (PHOTOS)