பாரிஸ் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஆட்டம் போட்ட ‘அரை நிர்வாண’ பெண்கள்!! (Photos)
பாரிஸ் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 8 பெண்கள் டாப்-லெஸ் ஆட்டம் போட்டதில், பரபரப்பு ஏற்பட்டது. புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்தே இவர்கள் இந்த அரை நிர்வாண ஆட்டத்தை பேட்டனர்.
பாரீஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள Notre Dame cathedral தேவாலயத்துக்கு 8 பெண்கள் வந்தனர். உடலை கால் வரை நீளமான கோட் அணிந்து வந்தவர்கள், பிரார்த்தனைக்காகவே வருகிறார்கள் என்றே அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.
திடீரென இந்த 8 பெண்களும் தாம் அணிந்திருந்த கோட்டுகளை கழட்டிவிட்டு, கோஷங்களை எழுப்ப தொடங்கினர். அப்போதுதான், அவர்கள் டாப்-லெஸ் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் என அங்கிருந்தவர்கள் தெரிந்து கொண்டனர். “போப் இனி இல்லை” எனவும், “குட்பாய் போப் பெனடிக்ட்” என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.
“இது ஒரு புனிதமான இடம். இங்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாது” என்று அங்கிருந்த பிரெஞ்ச் பெண் ஒருவர் கூறியதையும் இவர்கள் கேட்பதாக இல்லை. அதையடுத்து, தேவாலய காவலர்கள் வந்து இவர்களை கைகளைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தக் காட்சியை கீழேயுள்ள போட்டோவில் பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் பிரான்ஸில் உள்ள பெண்கள் விடுதலை அமைப்பினர். இந்த அமைப்பு, புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI-க்கு எதிரான கோஷங்களையே எழுப்பினர்.
கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் விடுதலை அமைப்பினர் இப்படியான டாப்-லெஸ் ஆர்ப்பாட்டங்களை செய்ய தொடங்கியுள்ளனர். ரஷ்யா, உக்ரேன் மற்றும் பிரிட்டனில் ஜனநாயக ஆதரவு, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக டாப்லெஸ் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது, பெண்கள் விடுதலை அமைப்புகளுக்கு வழக்கமாகி போயுள்ளது.
பிரான்சின் உள்துறை அமைச்சர் மேனுவல் வால்ஸ், பாரிஸ் நகர மேயர் பர்னார்டு டிலோனே ஆகிய இருவரும் இந்த அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இது ஒரு துரதிஷ்டமான சம்பவம்” என்று கூறியுள்ள பர்னார்டு டிலோனே, “பிரான்ஸில் ஆண், பெண், என்ற பேதம் ஏதும் இல்லாத நிலையில், ‘பெண்கள் விடுதலை’ எனக் கூறிக்கொள்ளும் அமைப்புகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை” என்றும் தெரிவித்துள்ளார்.
எப்படியோ, இந்த பெண்கள் விடுதலை அமைப்பினர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் தலைப்பு செய்திகளில் இன்று இடம்பிடித்துள்ளனர்.
Average Rating