ஜப்பானுக்குள் நுளைந்த ரஷ்ய போர் விமானம்!
ரஷ்ய போர் விமானங்கள் தமது வான் பகுதிக்குள் அத்துமீறி வந்துவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளது, ஜப்பான். அதுவும், ரஷ்யாவால் பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமது தீவுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானியர்கள் அமைதி பேரணி வைத்த தினத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என ஜப்பான் குற்றம்சாட்டுகிறது. -neeRRu (வியாழக்கிழமை) இரு ரஷ்ய போர் விமானங்கள், ஜப்பானிய வான்பரப்பில் அத்துமீறி புகுந்த உடனே, ஜப்பானிய விமானப்படை விமானங்கள், அவற்றை துரத்துவதற்காக புறப்பட்டு சென்றன. ஆனால், அதற்குள் ரஷ்ய போர் விமானங்கள் ஜப்பானிய வான் பகுதியில் இருந்து வெளியேறி, பசுபிக் கடலுக்கு மேலாக பறக்க தொடங்கி விட்டன.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டோக்கியோவில் உள்ள ரஷ்ய தூதரை மாலை அழைத்து, தமது அதிருப்தியை தெரிவித்தார். ஆனால், ரஷ்யா, இந்த அத்துமீறல் நடந்ததை மறுத்துள்ளது. மாஸ்கோவில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, “ஜப்பான் குறிப்பிடும் பகுதிக்கு அருகே எமது விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது உண்மை. ஆனால், அந்த விமானங்கள் ஜப்பான் வான் பகுதிக்குள் செல்லவே இல்லை” என்று கூறியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில், ஜப்பானுக்கு சொந்தமான சில தீவுகளை ரஷ்யா கைப்பற்றியது. அந்த தீவுகளை தம்மிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேரணி நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது. அப்படியான தினத்தில், ரஷ்யா தமது பலத்தை காட்டுவதற்காக போர் விமானங்களை ஜப்பானுக்கு மேலாக பறக்க விட்டது என ஜப்பானிய மீடியாக்கள் சொல்கின்றன. இதற்கு முன், ரஷ்ய விமானம் ஒன்று ஜப்பான் வான் பகுதிக்குள் வந்த சம்பவம், கடந்த 2008 – ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 9 – ம் தேதி நடந்தது. அப்போது, உள்ளே வந்த விமானம், ரஷ்ய விமானப் படையின் Su-27 ரக விமானம் (மேலே போட்டோவை பார்க்கவும்). இன்று ஜப்பானுக்குள் பறந்ததாக ஜப்பான் கூறும் இரு விமானங்களும் இதே ரக விமானங்கள் தான்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating