ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு, பலர் கைது

Read Time:1 Minute, 42 Second

vaiko-002ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும்இ தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக வைகோ அறிவித்தார். இதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரெயில் மற்றும் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சுமார் 1000 தொண்டர்கள் டெல்லியில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் இன்று காலையில் ஜந்தர்மந்தரில் திரண்டனர். இந்திய பிரதமர் இல்லம் இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையில் 144 தடை உத்தரவூ பிறப் பிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிஸ் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார். அதன்படி அனைவரும் பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டனர். அப்போது வைகோ உள்பட அனைவரையூம் பொலிசார் கைது செய்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்
Next post மனைவியின் கவர்ச்சி ஆடையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்!