கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்தவர்களில் 3பேர் நாடு கடத்தல்

Read Time:2 Minute, 43 Second

canada_flag2009ம் ஆண்டு ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு வந்தவர்கள் ‘டார்வின்’முறையின் மூலமே இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவை வந்தடையும் வரை உயிர் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசியன் லேடி கப்பல்களில் 76 பேரை கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நான்கு இலங்கை தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கனேடிய நீதிமன்றத்தில் இந்த கருத்தை தமிழர் தரப்பின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து வெளியேறிய 76 பேரும் பல்வேறு வழிகளில் தமது பயணத்தை தொடர்ந்தனர். இந்தோனிசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளின் ஊடாக பயணிக்கும் போது அந்த நாட்டு அதிகாரிகளில் பல இலங்கை தமிழர்கள் திருப்பியனுப்பபட்டனர்.

எனினும் அவர்களும் இந்தக்கப்பலில் பயணித்துள்ளனர். சில இடங்களில் இவர்கள் மூடிய கனரக வாகனங்களுக்குள் அடைப்பட்டு தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

24 பேர் இந்தோனேசியாவில் தங்கவைக்கப்பட்டனர். 52 பேர் பேங்கொக் வழியாக ஓசியன் லேடி கப்பலில் பயணித்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள், ‘டார்வினின்’ முறைப்படி மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் திடகாத்திரத்துடன் கனடாவை வந்தடைந்தாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ராஜ் கந்தசாமி, விக்னேஸ்வராஜ் தேவராஜ், பிரான்ஸிஸ் அந்தோனிமுத்து மற்றும் ஜெயசந்திரன் கனகராஜ் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு விசாரணையின் போதே இந்த கருத்தை சட்டத்தரணி குறிப்பிட்டார்.

ஓசியன் லேடி கப்பலில் கனடாவை சென்றடைந்த 76 பேரில் 3 பேர் நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளனர். 15 பேருக்கு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

15 பேருக்கு புகலிடக்கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 42 பேரின் கோரிக்கை இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தளத்தில் மாணவி வல்லுறவூ உப அதிபர் கைது
Next post இன்றைய ராசிபலன்:07.02.2013