ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை குழந்தைகளை பெற்ற இங்கிலாந்து பெண்!

Read Time:3 Minute, 20 Second

uk.resizeகுறைப் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தாலே எல்லோருக்கும் ஆடிப் போய் விடும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் 9 மாத இடைவெளியில் 2 குழந்தைகளை, குறைப் பிரசவத்தில் பெற்றுள்ளார். அவரது பெயர் கிளேர் ஆர்ம்ராட். இவருக்கு முதலில் ஒரு மகளும், பின்னர் மகனும் அடுத்தடுத்து குறைப் பிரசவத்தில் பிறந்தனர். இருவருக்கும் ஏகப்பட்ட ஆரோக்கியக் கோளாறுகள். 26 வயதான ஆர்ம்ராட் இரு பிரசவத்தின்போதும் கடுமையான சிக்கல்களைச் சந்தித்து உயிர் பிழைத்துள்ளார். இவரது மகன் ஆலிஸ் எட்டு மாதத்தில் பிறந்தான். 7 வாரம் கழித்து மீண்டும் கர்ப்பமானார் ஆர்ம்ராட். மகள் காரேத் 25 வாரத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்தார்.

இரு குழந்தைகளும் பிறந்ததும் சிக்கலான நிலையில்தான் இருந்தனர். இதையடுத்து கடும் சிரமத்திற்குப் பின்னர் டாக்டர்கள் குழந்தைகளின் உயிரைக் காத்து ஆர்ம்ராட் கையில் கொடுத்தனர்.

இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர் என்பது தனிக்கதை. அதை விட சூப்பரான விஷயம், இவர் கர்ப்பத் தடை முறைகளைக் கையாண்டபோது 4 முறை கர்ப்பம் தரித்து டாக்டர்களையே குழப்பியடித்தவர்.

தற்போது ஆலிஸுக்கு நுரையீரல் பிரச்சினை உள்பட பல உடல் நலக் கோளாறுகள் இருக்கின்றனவாம். எனவே தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்தாக வேண்டுமாம்

மேலும் பிறந்து 10 மாதம் கழிந்த நிலையில் குழந்தைக்கு ஆறு முறை மாரடைப்பும், வலிப்பும், மூளை பாதிப்பும் ஏற்பட்டதாம். இத்தனையையும் தாண்டி அக்குழந்தை உயிருடன் இருப்பது டாக்டர்களையே வியப்படைய வைத்துள்ளதாம்

ஒருமுறை குழந்தையின் நிலைமை மோசமடைந்து விட்டது. சரி இனி பிழைக்காது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளையும் கூட செய்து விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் குழந்தை பிழைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டதாம்

தற்போத இரு குழந்தைகளும் ஓரளவு இயல்பான நிலையில் வளர்ந்து வருகின்றனராம். இதனால் ஆர்ம்ராட் தம்பதி மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் உள்ளது.

கடவுள் குழந்தைகளைப் படைக்கும்போது அவற்றை தேவதைகளின் கையில் ஒப்படைக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. தேவதையின் கையில் இருக்கும் வரை யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லைதானே..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்
Next post தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்