செக்ஸ் உறவு கொண்டமைக்கும் சேர்த்து பணம் அறவிட்ட சட்டத்தரணி பணிநீக்கம்

Read Time:1 Minute, 39 Second

rapeஅமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தன் கட்சிக்காரரான பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதற்கும் சேர்த்து, கட்டணம் அறவிட்டமையால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, ஏகன் நகரைச் சேர்ந்த, சட்டத்தரணி தாமஸ் லோ, 58.கடந்த, 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் வழக்கில் ஆலோசனை பெற வந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட, வழக்கறிஞர் தாமஸ், பின் அவருடன் செக்ஸ் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.

வழக்குக்காக சந்திக்கும் நேரம் தவிர, செக்ஸ் உறவு கொண்டதற்கும் சேர்த்து, சட்டத்தரணி தாமஸ் கட்டணம் வசூலித்துள்ளார்.

இதனால், அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்ட தாமஸ், வழக்கில் இருந்தும் விலகிக் கொண்டார்.

நடந்த விவரங்களை, இந்த பெண், வெளியில் சொன்னதால், தாமஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டை, தாமஸ், தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தாமஸ், வழக்கறிஞர் பணியிலிருந்து, பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!
Next post இன்றைய ராசிபலன்கள் & ராசி குணங்கள் :04.02.2013